உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க புதிய நிர்வாகிகள் பட்டியல் தலைைம கழகம் அறிவிப்பு

Published On 2022-09-29 09:46 IST   |   Update On 2022-09-29 09:46:00 IST
  • தமிழகம் முழுவதும் தி.மு.க உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி தேனி தெற்கு, வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் விபரம்

தேனி:

தமிழகம் முழுவதும் தி.மு.க உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி தெற்கு மாவட்ட அவைத்தலைவராக மனோகரன், செயலாளராக எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

துணைசெயலாளர்களாக இளங்கோ, மலைச்சாமி, ஈஸ்வரிபிச்சை, பொருளாளராக பால்பாண்டி ஆகியோரும், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஆசையன், அரசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்களாக சேரன், சேகர், முகமதுரபிக், சுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கம்பம் ஒன்றிய செயலாளராக தங்கபாண்டியன், ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளராக ராஜாராம், ஆண்டிப்பட்டி மேற்கு மகாராஜன், கடமலைக்குண்டு வடக்கு தங்கபாண்டி, கடமலைக்குண்டு தெற்கு சுப்பிரமணி, சின்னமனூர் கிழக்கு அண்ணாத்துரை, உத்தமபாளையம் கிழக்கு அணைப்பட்டி முருகேசன், உத்தமபாளையம் மேற்கு குமரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகர செயலாளர்களாக கூடலூருக்கு லோகன்துரை, சின்னமனூர் முத்துக்குமார், கம்பம் தெற்கு செல்வகுமார் ஆகியோரும், பேரூர் செயலாளர்களாக ஆண்டிப்பட்டி சரவணன், ைஹவேவிஸ் கணேசன், காமயகவுண்டன்பட்டி பாஸ்கரன்,

க.புதுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி, அனுமந்தன்பட்டி ராஜ்குமார், ஓடைப்பட்டி கனகராஜ், கோம்பை முருகன், உத்தமபாளையம் முகமதுஅப்துல்காசிம், தேவாரம் மரியஅஞ்சலிதாஸ், பண்ணைப்புரம் இளங்கோ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி வடக்கு மாவட்டம்

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக தங்கதமிழ்ச்செல்வனும், அவைத்தலைவராக செல்லபாண்டியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணைச்செயலாளர்களாக செந்தில்முருகன், திருக்கண்ணன், நாகஜோதி, பொருளாளராக சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சங்கர், முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்களாக தெய்வேந்திரன்,

ரமேஷ், கண்ணையன், முனியம்மாள் ஆகியோரும், ஒன்றிய செயலாளர்களாக தேனி வடக்கு சக்கரவர்த்தி, தேனி தெற்கு ரத்தினசபாபதி, போடி கிழக்கு அய்யப்பன், போடி மேற்கு லட்சுமணன், பெரியகுளம் வடக்கு பாண்டியன், பெரியகுளம் தெற்கு சரவணக்குமார், சின்னமனூர் மேற்கு முருகேசன் ஆகியோரும், நகர செயலாளர்களாக தேனி நாராயணபாண்டியன்,

போடி புருஷோத்தமன், பெரியகுளம் முகமதுஇலியாஸ் ஆகியோரும், பேரூர் செயலாளர்களாக பழனிசெட்டிபட்டி செல்வராஜ், பூதிப்புரம் கவியரசு, மேலச்சொக்கநாதபுரம் ராஜேந்திரன், தேவதானப்பட்டி திலகர்ராஜா,

கெங்குவார்பட்டி தமிழன், வடுகபட்டி காசிவிஸ்வநாதன், தென்கரை பாலமுருகன், குச்சனூர் திலிப்குமார், மீனாட்சிபுரம் செல்வம், தாமரைக்குளம் கருத்தராசு, மார்க்கையன்கோட்டை முருகன், வீரபாண்டி செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News