உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

தேனி நகர் மன்ற கூட்டம்

Published On 2022-10-21 11:31 IST   |   Update On 2022-10-21 11:31:00 IST
  • தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • குடிநீர், சுகாதாரம் மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தேனி:

தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி கவுன்சிலர்கள் சூர்யா பாலமுருகன், கடவுள், நாராயண பாண்டியன், பிரிட்டிஷ், விஜயன் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டு பகுதியில் உள்ள குடிநீர், சுகாதாரம் மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நகர் மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தனர். இதற்கிடையே கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் எல்.இ.டி தெரு மின்விளக்குகள் ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News