உள்ளூர் செய்திகள்

ஆவடி அருகே கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி

Published On 2022-06-27 14:50 IST   |   Update On 2022-06-27 14:50:00 IST
  • விஜயலட்சுமி தொடர்ந்து மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
  • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது37). அதேபகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி விஜயலட்சுமி.

கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவி விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தும் கேட்கவில்லை. கிருஷ்ணனின் தகராறு எல்லை மீறி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் கிருஷ்ணன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது அவர் மனைவி விஜய லட்சுமியை அடித்து உதைத்ததாகவும் தெரிகிறது. பின்னர் கிருஷ்ணன் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயலட்சுமி தொடர்ந்து மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

அவர் வீட்டின் அருகே கிடந்த பெரியகல்லை தூக்கிவந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் கிருஷ்ணனின் தலையில் போட்டார். இதில் பலத்த காயம்அடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிைடயே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோத கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணனின் மனைவி விஜயலட்சுமியை கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News