உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் வீட்டில் உணவு சாப்பிட்ட மத்திய அமைச்சர்

Published On 2023-02-28 15:57 IST   |   Update On 2023-02-28 15:57:00 IST
  • மேற்கு பல்லடம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
  • மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம்.பி. சீனிவாசன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பல்லடம் :

மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், தென்னை உற்பத்தியாளர்கள், விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பாஜக., பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் மேற்கு பல்லடம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பல்லடம் நகராட்சி தேர்தலில் பா.ஜ.க.சார்பில் வெற்றி பெற்ற சசிகலா ரமேஷ், ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோரை சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி 7வது வார்டு உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் (அதிமுக) பல்லடத்தில் போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க மேம்பாலம் அமைத்துத் தரும்படி கோரிக்கை மனு அளித்தார்.

இதேபோல சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை பல்லடத்தில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் ஆதி திராவிடர் ஈஸ்வரி செல்வராஜ் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சிகளில், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி தர்மராஜ் , விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம்.பி. சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News