உள்ளூர் செய்திகள்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்த போது எடுத்தபடம்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Published On 2023-03-08 10:30 GMT   |   Update On 2023-03-08 10:30 GMT
  • பாதுகாப்புடன் இந்தப் பணி வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
  • ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 558 ரொக்கப் பணம் இருந்தது.

தருமபுரி,

தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா முடிந்த பிறகு ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று கோவில் வளாகத்தில் இந்த ஆண்டுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராதாமணி ஆகியோர் இந்த பணிகளை பார்வையிட்டனர். பலத்த பாதுகாப்புடன் இந்தப் பணி வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முடிவில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 558 ரொக்கப் பணம் மற்றும் சில்லறை காசுகள் இருந்தது. மேலும் 12 கிராம் தங்கமும், 200 கிராம் வெள்ளியும் இருந்தது. இவை அனைத்தும் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கோவில் வங்கி கணக்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News