உள்ளூர் செய்திகள்

மகன் மருத்துவச் செலவுக்காக திருடனாக மாறிய வாலிபர்

Published On 2022-09-11 09:17 GMT   |   Update On 2022-09-11 09:17 GMT
  • ஒலிப்பெருக்கி கருவிகள் மாயமாகியது.
  • 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் திருடுபோனது தெரியவந்தது

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி காட்டூர் பகுதியில் பள்ளிவாசல் உள்ளது. இங்கு கடந்த 23-ந் தேதி அன்று பள்ளி வாசலில் வழிபாட்டுக்கு பாங்கு ஓதுவதற்காக வைத்திருந்த ஒலிப்பெருக்கி கருவிகள் மாயமாகியது.

இது குறித்து காதர் பாஷா என்பவர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியபோது இதேபோன்று ஈரோடு மாவட்டம் சத்தி, கடத்தூர், பங்களாபுதூர், மற்றும் சிறுமுகை, கிணத்துக்கடவு, தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது.

மேலும் கேரளா மாநிலம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் திருடுபோனது தெரியவந்தது

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநா ராயணன் உத்தரவி ன்பேரில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில், மேட்டுப் பாளையம் இன்ஸ் பெக்டர் நவநீத கிருஷ்ணன், சப்- இன்ஸ் பெக்டர்கள் செல்வ நாயகம், முருகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குற்றவாளியை பிடித்தனர்.

விசாரணையில்அவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் டி.கே பள்ளி பகுதியைச் சேர்ந்த அசேன் (32) என்பதும், இவரது மகனுக்கு இருதய பிரச்சினை இருப்பதால் சிகிச்சை அளிக்க அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 15 ஆம்ப்ளிபயர்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News