எரிந்து நாசமான கூரை வீடு.
கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது
- இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
- தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.