சீர்காழியில் விநாயகர் சிலையை போலீசார் தூக்கி சென்ற காட்சி.
விநாயகர் சிலையை கரைக்க உதவிய போலீசார்
- 35-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று ஒவ்வொரு விநாயகர் சிலையாக சீர்காழி உப்பனாற்றுக்கு கொண்டு செல்கின்ற நிகழ்ச்சி நடந்தது அப்பொழுது சீர்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைக்க கொண்டு வரப்பட்டது.
விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டது.
இதனால் விநாயகர் சிலை கரைப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து மேலும் விநாயகர் சிலைகள் வந்த வண்ணம் இருந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்க தூக்கி சென்று உப்பனாற்றில் சென்று கரைக்க உதவினர்.