உள்ளூர் செய்திகள்
பாலத்தில் தூங்கியவர் தவறி விழுந்து பலி
- தலையில் பலத்த காயம்அடைந்த ஏழுமலை பலியானார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது55) சலூன்கடை நடத்தி வந்தார். இவர் அப்பகுதியில் நடந்த கோவில் விழாவில் கலந்து விட்டு நள்ளிரவில் அங்குள்ள சிறு பாலத்தின் தடுப்பு சுவரில் தூங்கினார்.
அப்போது தூக்கத்தில் இருந்த ஏழுமலை உருண்டு வாய்க்கால் பாலத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம்அடைந்த ஏழுமலை பலியானார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.