உள்ளூர் செய்திகள்
குமரேசன்.

அரசு இடத்தை தனியாருக்கு விற்ற ஊராட்சி செயலர் சஸ்பெண்டு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள் எரிப்பு

Published On 2022-07-30 10:38 IST   |   Update On 2022-07-30 10:38:00 IST
  • அரசு இடத்தை தனியாருக்கு விற்ற ஊராட்சி செயலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
  • ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கடந்த பல வருடங்களாக ஊராட்சி செயலராக க.விலக்கு பகுதியை சேர்ந்த குமரேசன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு திருமலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக குமரேசன் இருந்தார்.

அப்போது பிஸ்மி நகர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்காக அரசு 10 செண்ட் இடம் ஒதுக்கி அதற்காக பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது ஊராட்சி மன்ற தலைவராக பழனி யம்மாள் என்பவர் இரு ந்தார். துணைத் தலைவராக இருந்த பால்பாண்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலை யில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஊராட்சி செயலர், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பால்பாண்டி ஆகிய மூன்று நபர்களும் பிளாட் போட்டு விற்பனை செய்ததாக தெரியவந்தது. இது குறித்து அப்போது வட்டார வளர்ச்சி அலுவல ராக இருந்த ரங்கராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்க ராஜ் கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு இறந்து விட்டார். ரங்கராஜ் அளித்த புகார் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஊராட்சி செயலர் குமரேசன் மற்றும் தலைவர் பழனியம்மாள் ஆகியோருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை யும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஊராட்சி செயலர் குமரேசனை சஸ்பெண்டு செய்து கலெக்டர் முரளிரதரன் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே நேற்று இரவு ஊராட்சி செயலர் குமரேசன் திருமலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலக த்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை தீ வைத்து கொளுத்தினார். இதுகுறித்து தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் கனிராஜா மற்றும் துணைத் தலைவர் செல்ல ம்மாள் ஆகியோர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News