உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த ஊராட்சி செயலாளர் சாவு

Published On 2022-09-21 12:26 IST   |   Update On 2022-09-21 12:26:00 IST
  • எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார்.
  • சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைபட்டு அடுத்த சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (46). இவர் மேல்சிறுவள்ளூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்களுடன் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி ஆரோக்கியதாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்  ஆரோக்கியதாசை இறந்த நிலையில் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News