உள்ளூர் செய்திகள்

திட்டக்குடியில் தொடரும் திருட்டு தனியார் நிறுவன வாகனத்தை கடத்த முயன்ற வாலிபர் கைது

Published On 2023-09-26 07:49 GMT   |   Update On 2023-09-26 07:49 GMT
  • சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
  • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி - கோழியூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வாகனத்தை நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த குட்டியானை வாகனம் இரும்பு வேலியின் மோதி நகர முடியாமல் நின்றி ருந்தது. இதனை பார்த்த நிறுவன உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் குட்டியானை வாகனத்தில் அமர்ந்து அதனை இயக்குகிறார். இந்த வாகனம் அருகில் இருந்த இரும்பு வேலியில் மோதி நிற்கிறது. இதனை வெளியில் எடுக்க முயற்சிக்கும் மர்ம நபர், குட்டியானை வாகனத்தை இயக்க முடியாததால், அங்கேயே விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் கார்த்திக், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். இதில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகள் அடிக்கடி திருடி போயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஸ், குட்டியானை போன்ற வாகனங்களும் திருடப்படுகின்றன. இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News