உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு

Published On 2022-06-27 07:47 GMT   |   Update On 2022-06-27 07:47 GMT
  • சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
  • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வலியுறுத்தல்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மநாகராட்சியில் 14 பேர், சங்ககிரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டியில் தலா 2, கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 பேரில் 5 பேர் குணமாகினர். தற்போது 73 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி யதாவது:-

சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், வரும் நாட்களில் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News