பேரூராட்சி குப்பை கழிவுகளை அகற்ற கோரிசாலை மறியல்
- அனைத்து கழிவுகளை யும் கழிவு, குப்பைகளை 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருகின்றனர்.
- இதனால் ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே ஊணாம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி பகுதியில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கோழிகடை கழிவுகள், ஆட்டுக் கழிவுகள், பொதுமக்கள் அன்றாடம் வெளியேற்றப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகள் என அனைத்து கழிவுகளை யும் கழிவு, குப்பைகளை 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருகின்றனர்.
இதனால் இந்த கிராமத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொளுத்தி விடுவதாகவும் அதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் கூறியும் இதுவரை எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊணாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் ஊணாம் பாளையம் கிராமம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா ஆகியோர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் முழுமையாக குப்பைகளை அகற்ற அதிகாரப்பூர்வமான நம்பிக்கை ஏற்படும் வகையில் எழுதிக் கொடுக்கும் பட்சத்தில் சாலை மறியலை கைவிடுவதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.