உள்ளூர் செய்திகள்
பித்தளை பாத்திரங்கள் திருடியவர் கைது
- வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு நின்றிருந்த நபர் பித்தளை பாத்திரங்களை திருடிக் கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அப்பு நாயுடு தெருவை சேர்ந்த மோகன் (வயது67). இவர் நேற்று தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த மோகன் கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு நின்றிருந்த நபர் பித்தளை பாத்திரங்களை திருடிக் கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்து சிங்காரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் ஊத்தங்கரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன்( 40) என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.