தேவாரம் அருகே கோம்பை வனப்பகுதியில் உலா வரும் மக்னா யானை.
தேவாரம் அருகே விவசாய நிலங்களில் மீண்டும் புகுந்த மக்னா யானை
- நீண்ட போராட்டத்துக்கு பின்னர் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
- மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே கோம்பை வனப்பகுதியில் கேரளாவில் இருந்து வந்த மக்னா யானை அட்டகாசம் செய்து வந்தது. மேலும் 15க்கும் மேற்பட்ட வர்கள் யானை தாக்கி உயிரிழந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியது.
இந்த மக்னா யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையி னர் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
சில மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கோம்பை வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. தம்மி நாயக்கன்பட்டி, பொன்கு ன்றம் மலையடிவாரப்பகுதி களில் மூர்க்கத்தனமாக சுற்றி வரும் யானை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.