உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே கிராவல் மண் திருடிய லாரி, ஜே.சி.பி. பறிமுதல்

Update: 2022-07-02 04:38 GMT
  • தேனி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • கிராவல் மண் கடத்திய லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிகாரிகள் க.விலக்கு அருகே கரட்டுப்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் கிராவல் மண் திருடியது தெரிய வந்தது.

அதிகாரிகள் லாரி மற்றும் மண் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News