உள்ளூர் செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் பாலமுரளியை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்

Published On 2022-06-19 14:57 IST   |   Update On 2022-06-19 14:57:00 IST
  • ஆற்றில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.
  • தீயணைப்பு படை வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து பாலமுருகனை தேடி வருகின்றனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறை வடக்குமட வளாகத்தை சேர்ந்த பிச்சை செல்வம் மகன் பாலமுரளி (வயது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தன் தாயார் மகாதேவியுடன் திருப்பாலத்துறை குடமுருட்டி ஆற்றில் பாலமுரளி குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து பாபநாசம் தீயணைப்புத் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து பாலமுருகனை தேடி வருகின்றனர். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News