உள்ளூர் செய்திகள்

பொங்கலுக்கு அரசே மண்பாண்டம், அடுப்பு வழங்க வேண்டும்- மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

Published On 2022-10-11 14:46 IST   |   Update On 2022-10-11 14:46:00 IST
  • மூலப் பொருட்களான களிமண், மணல் உள்ளிட்டவற்றை ஏரிகளில் எடுப்பதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதி வழங்க வேண்டும்.
  • புதிய அரிசியை புதுப்பானையில் பொங்க லிட களி மண்ணால் ஆன புது பானை, புது அடுப்பு ஆகியவற்றை எங்களிடம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி,

பொங்கலுக்கு அரசே மண்பாண்டம், அடுப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், மண்பாண்ட தொழி லாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எங்கள் குல தொழிலாளர்கள், மண்பாண்டம், அடுப்பு செய்ய தேவைப்படும் மூலப் பொருட்களான களிமண், மணல் உள்ளிட்டவற்றை ஏரிகளில் எடுப்பதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதி வழங்க வேண்டும்.அதுபோல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருவது போல், வரும் ஆண்டில் புதிய அரிசியை புதுப்பானையில் பொங்க லிட களி மண்ணால் ஆன புது பானை, புது அடுப்பு ஆகியவற்றை எங்களிடம் அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கினால், அந்தந்த பகுதிகளில் வாழும் மண்பாண்ட தொழி லாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். இதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News