உள்ளூர் செய்திகள்
வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளை
- சுந்தரேசன் வீட்டிலிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்க நகைகள், 48 கிராம் பிளாட்டினம் மற்றும் செல்போன் ஆகிய பொருட்கள் மாயமாகின.
- சுந்தரேசன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
சேலம்:
சேலம் கோரிமேடு அருகே உள்ள அறிவியல் பூங்கா சாலையில் வசித்து வருபவர் சுந்தரேசன் ஜெயமணி (வயது 39). இவரது வீட்டில் கடந்த 4-ந் தேதி முதல் 8-ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் வேலை நடந்து வந்தது.
இந்த நிலையில் சுந்தரேசன் வீட்டிலிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்க நகைகள், 48 கிராம் பிளாட்டினம் மற்றும் செல்போன் ஆகிய பொருட்கள் மாயமாகின.
இதுகுறித்து சுந்தரேசன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்ய வந்த பூபதி, தீபக், ஹரி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.