உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பழனி அருகே அதிகாரிகள் வருவதை அறிந்ததும் போலி டாக்டர் தப்பி ஓட்டம்

Published On 2023-04-19 12:21 IST   |   Update On 2023-04-19 12:21:00 IST
  • அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது உறுதியானது.
  • மருந்து கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல்:

பழனி தாராபுரம் சாலையில் உள்ள மருந்து கடையில் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், அதனால் மக்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குனர் பூமிநாதன் தலைமையில் பழனி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஸ்குமார், மயக்கவியல் நிபுணர் டால்ஸ்டாய் உள்ளிட்டோர் அந்த மருந்து கடையை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.

அதிகாரிகள் வருவதை அறிந்த கடையின் உரிமையாளரும், சிகிச்சை அளித்தவருமான முகமதுகவுசிக் தப்பிஓடிவிட்டார். அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது உறுதியானது.

இதையடுத்து கடையில் இருந்த மாத்திரை, மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பழனி நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். மேலும் அந்த மருந்து கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முகமதுகவுசிக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News