உள்ளூர் செய்திகள்

யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்.

யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்வு

Published On 2023-07-03 09:47 GMT   |   Update On 2023-07-03 09:47 GMT
  • தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
  • பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பிரஹன்நாயகி அம்பிகை சமேத அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் திருப்பணி கள் முடிவடைந்த நிலையில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதற்காக கோவிலின் அருகே 59 யாகம் குண்டங்களுடன் கூடிய பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, இன்று (3-ந் தேதி) முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்வு நடந்தது. திருப்ப னந்தாள் மன்னியாற்றில் இருந்து புனிதநீர் கொண்ட கலசங்களுக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் யானையின் மீது வைத்து, மேளதாளங்கள் முழங்க, பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், காசித்திருமட அதிபர் எஜமான் சுவாமிகள், இளவரசு தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News