காவலுக்குச் சென்ற விவசாயியை தூக்கி வீசிய யானை
- விவசாய நிலங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
- தோட்டத்தில் சென்று பார்த்த போது பசப்பா மயக்க நிலையில் இருந்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு விவசாய நிலங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் தேன்கனி கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்த சித்தூரப்பா என்ற பசப்பா (வயது 60) தன் தோட்டத்தில் உள்ள ராகிபயிர்களை அறுவடை செய்து களத்தில் குவித்துள்ளார்.
அதனால் நேற்றிரவு காவலுக்கு சென்று மரத்தின் மேல் அமைத்திருந்த குடிசை அமர்ந்து காவலுக்கு இருந்துள்ளார் .அதிகாலை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார் .அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை பார்த்து பசப்பா ஒடி உள்ளார்.
அந்த யானை பசப்பாவை துரத்திக் கொண்டு துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது. இதில் கிழே விழுந்து கை, இடுப்பு, பகுதியில் படுகாயம் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
காவலுக்கு சென்றவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தோட்டத்தில் சென்று பார்த்த போது பசப்பா மயக்க நிலையில் இருந்துள்ளார்.
அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த தேனகனிக்கோட்டை வன சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று தாரை, தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து, அதிக ஒலி எழுப்பி ஒற்றை யானையை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். வனத்துறையினர் அங்கே முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மரகட்டாவை சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.