உள்ளூர் செய்திகள்

.

நெல்லுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திட வேண்டும்- விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Published On 2022-06-11 15:45 IST   |   Update On 2022-06-11 15:45:00 IST
  • பாசிப்பயருக்கு ஒரு குவிண்டாலுக்கு 475 ரூபாய் வழங்க வேண்டும்.
  • விளைவிக்காத 18 பயிர்களுக்கு மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,

அன்றாடம் பயன்படுத்தும் நெல்லுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமக வுண்டர் வெளி யிட்டுள்ள அறிக்கை:-

மத்திய அரசு நேற்று முன்தினம், விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலையை அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

எள்ளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 350 ரூபாயும், சோயா பீன்ஸ் ஒரு குவிண்டாலுக்கு 350 ரூபாயும், சூரியகாந்தி ஒரு குவிண்டாலுக்கு, 385 ரூபாயும், பாசிப்பயருக்கு ஒரு குவிண்டாலுக்கு, 475 ரூபாயும் என அதிகம் விளைவிக்காத 18 பயிர்களுக்கு மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.

ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெல் ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாயை மட்டுமே உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

பஞ்சாப் முதல் தமிழகம் வரை அதிக அளவில் நெல் பயிரிடப்படுகின்றன. ஆனால் நெல்லுக்கான விலையை உயர்த்தாமல் மத்திய அரசு நெல் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. இவற்றை மறுபரிசீலனை செய்து நெல் குவிண்டாலுக்கு 1000 ரூபாய் உயர்த்தியும், மாநில அரசு ஒரு குவிண்டாலுக்கு 350 ரூபாய் ஆதார விலையாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தனது அறிக்கையில் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.

Similar News