உள்ளூர் செய்திகள்

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

Published On 2023-11-13 10:06 GMT   |   Update On 2023-11-13 10:06 GMT
  • போக்சோ வழக்கில் கைதாகி தங்க வைக்கப்பட்டிருந்தான்.
  • சிறுவன் தீபாவளி நாளான நேற்று சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினான்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் குற்ற வழக்கு ஒன்றில் போக்சோ வழக்கில் கைதாகி தஞ்சாவூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தான்.

இந்த நிலையில் அந்த சிறுவன் தீபாவளி நாளான நேற்று சுவர் ஏறி குதித்து தப்பிச் ஓடினான்.

பின்னர் அச்சிறுவன் கபிஸ்தலம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றான். உடனடியாக போலீசார் கபிஸ்தலம் நோக்கி விரைந்து சென்றனர்.

ஆனால் தன்னைத் தேடி போலீசார் வீட்டிற்கு வருவதை அறிந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதையடுத்து தப்பிச் சென்ற சிறுவனை போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிரமாகச் தேடி வருகின்றனர்.

தப்பியோடிய சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.

இச்சிறுவன் உள்பட மொத்தம் 2 நபர்களே கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றொரு சிறுவன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுவரேறி குதித்து ஊட்டிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது மேட்டுப்பாளையம் செக் போஸ்டில் பஸ்சை மறித்து பிடித்து தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டான்.

பின்பு அவனுக்கு பிணை அளிக்கப்பட்டது.

பிணை முடிந்து சிறுவன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டான்.

இந்த நிலையில், இன்னொரு மாணவன் சுவரேறி குதித்து தப்பிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News