உள்ளூர் செய்திகள்

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்

Published On 2023-03-06 15:46 IST   |   Update On 2023-03-06 15:46:00 IST
  • ஜாக்டோ- ஜியோ சார்பில், வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.
  • பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ- ஜியோ சார்பில், வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன், தங்கதுரை, மாரப்பன், பாஸ்கரன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார். ஜாக்டோ- ஜியோ நிதி காப்பாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

இப்போராட்டத்தில், எதிர்கால இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பறிக்கின்ற 115, 139, 152 உள்ளிட்ட அரசு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ் .திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7&வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 400&க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News