மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தனிநபர் வீட்டு மாடியில் உள்ள தனியார் செல்போன் டவரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனதுர்காநகர், சரஸ்வதி நகர், பொதிகை நகர், லெட்சுமி நகர், ஏ.கே.எல். காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனிநபர் வீட்டு மாடியில் உள்ள தனியார் செல்போன் டவரை அகற்ற வேண்டும்.
அரசு உத்தரவை மீறிய அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கருப்புசாமி, மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் வனரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.