உள்ளூர் செய்திகள்

தஞ்சை உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையம் தொடக்கம்

Published On 2022-09-07 15:46 IST   |   Update On 2022-09-07 15:46:00 IST
  • மாடித்தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், கை தெளிப்பான்கள், கவாத்து கத்திரிக்கோல் மற்றும் குழித்தட்டுகளும் உள்ளன.
  • விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைவான விலையிலும் இருப்பதனால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர்:

தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை சார்பில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது.

தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் மரியரவிஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இங்கு தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குன்னூர் பழப்பதனிடும் நிலையத்தில் தயாரித்த ஜாம், மா ஊறுகாய்,மற்றும் கன்னியா குமாரியில் உள்ள தேனீக்கள் மகத்துவ மையத்தில் தயாரித்த தேன், பட்டை மற்றும் பிரியாணி இலையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.மேலும் மாடித்தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், கை தெளிப்பான்கள், கவாத்து கத்திரிக்கோல், மற்றும் குழித்தட்டுகளும் உள்ளன.

இங்கு விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைவான விலையிலும் இருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர்கள் முத்தமிழ்ச்செல்வி, கனிமொழி, தோட்டக்கலை அலுவலர்கள் சோபியா, கிருத்திகா, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வெங்கடாசலபதி, செந்தில்குமார், ராஜ்குமார் மற்றும் வேளாண் வணிகதுறை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News