சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த எண்கண் சுப்ரமணியசாமி.
எண்கண் சுப்ரமணியசாமி கோவிலில் தைப்பூச வழிபாடு
- வெண்ணதாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடைபெற்றது.
- வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணியசாமி கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் முக்கியத்துவம் பெற்ற கோவிலாக கோயில் வழங்குகிறது.
இக்கோயிலில் தைப்பூச ஜனவரி 22 முதல் பிப்ரவரி 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25 முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
பிப்ரவரி 2-ந்தேதி பல்லக்கு வெண்ணதாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ந்தேதி கோவில் திருத்–தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை முதல் தைப்பூச சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் காவிரி கரை சென்று தீர்த்தம் கொடுத்தல் மற்றும் காவடி அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
நேற்று வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல் மற்றும் பக்தர் காட்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளை காண திருவாரூர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று துவஜா அவரோகணம் நிகழ்வும், நாளை பிப்ரவரி 7-ந்தேதி விடையாற்றி சுந்தா–பிஷேகமும் நடைபெறுகிறது.