உள்ளூர் செய்திகள்

இறந்த போன லகுமப்பா

கெலமங்கலம் அருகே பயங்கரம்: தொழிலாளி கத்தியால் குத்தி கொலை

Published On 2022-06-19 15:28 IST   |   Update On 2022-06-19 15:28:00 IST
  • முன்விரோதம் காரணமாக கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
  • கூலி தொழிலாளியை கொலை செய்து விட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள தொட்ட பேளூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா இவரது மகன் லகுமப்பா (வயது40). கூலி தொழி லாளி. இவரது சகோதரர் முனியப்பா (45).

தந்தையும், மகன் முனியப்பாவும் தனிதனியே மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தந்தை என்பவரது மாடு பண்டிகைகளில் சரியாக ஓடவில்லை எனவும், எனவே தனது அண்ணனிடம் தனது மாட்டிற்கு நீதான் செய்வினை செய்து வைத்து விட்டாய் என்று கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லகுமப்பா பிரச்சனை செய்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் முனியப்பா என்பவருக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (32), சதீஷ் (22), விஜய் (25) ஆகியோர் பேசியுள்ளனர்.

அப்போது முதல் இரு தரப்பினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்றிரவு லகுமப்பா வீட்டின் அருகே மதுபோதையில் நின்று கொண்டு இருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த அந்த 3 பேரும் அவரிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் உள்பட 3 பேரும் சேர்ந்து லகுமப்பாவை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தேவராஜ் உள்பட 3 பேரும் தப்பியோடி விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிேலயே லகுமப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கூலி தொழிலாளியை கொலை செய்து விட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News