உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் பயங்கரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை

Published On 2022-07-25 12:29 IST   |   Update On 2022-07-25 12:29:00 IST
  • விருத்தாசலத்தில் பயங்கரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
  • உயிருக்கு போராடிய ரம்யா–வை வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி பகுதியை சேர்ந்தவர் அம்பலவாணன். அவரது மகன் ஸ்ரீதர்இவருக்கும் குறிஞ்சிப் பாடி பெத்தநாயகன் குப்பம் பகுதி சேர்ந்த ரம்யா என்ப வரும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப் பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதர் புதுப்பெண் ரம்யாவை மோட்டார் சைக்கிளில் கார்மாங்குடிக்கு அழைத்து வந்தார். அப்போது கார்மாங்குடி அருகே வந்த போது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த சுத்தியலால் ரம்யாவின் தலையில் அடித்தார். இதனால் அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் ஸ்ரீதர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

இதனை அருகே வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய ரம்யாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்ேபாது 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கொலை வழக்காக மாற்றி இதற்கு காரணமான ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News