உள்ளூர் செய்திகள்

உடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள காட்சி.

பழனி அருகே வெள்ளத்தால் துண்டான பாலம் தற்காலிக சீரமைப்பு

Published On 2023-10-18 12:06 IST   |   Update On 2023-10-18 12:06:00 IST
  • பச்சையார் பாலம் சேதமடைந்ததால் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
  • தற்காலிக தரைப்பாலத்தை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி:

பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நாயக்கர் தோட்டத்திற்கும், பெருமாள் புதூர் இடையே உள்ள பச்சையார் பாலம் சேதமடைந்ததால் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.

இதற்காக மாற்றுப்பாதை யாக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக பச்சையாற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், தொழிலா ளர்கள் மிகுந்த சிரமமடை ந்தனர். தனியார் பள்ளி பஸ்கள் 8 கி.மீ. தூரம் சுற்றி சென்றன.

இதனை தொடர்ந்து மழை நின்றவுடன் தரை ப்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. பின்னர் இன்று வழக்கம் போல் அந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. தற்காலிக தரைப்பாலத்தை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News