உள்ளூர் செய்திகள்

வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்காலில் ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்களை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே ஆபத்தை உணராமல் வாய்க்காலில் குளிக்கும் வாலிபர்கள்

Published On 2022-12-18 07:11 GMT   |   Update On 2022-12-18 07:11 GMT
  • ஆபத்தை உணராமல் பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் குதித்தும், கரணம் அடித்தும் உற்சாக மாக குளிக்கின்றனர்.
  • குழந்தைகளை எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என கண்காணிக்க வேண்டும்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்ட க்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாயிகளின் நலன் கருதி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆவி னங்குடி பகுதியில் சாலை யோரம் செல்லும் பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்காலில் அதிக அள வில் தண்ணீர் தற்போது செல்கிறது. நேற்று பள்ளி விடு முறை நாள் என்பதால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் குதித்தும், கரணம் அடித்தும் உற்சாக மாக குளிக்கின்றனர்.

நீர் நிலைகளில் தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி மாண வர்கள் குளிக்கும் இடம் அருகே அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் போலீஸ் நிலையம் உள்ளது. இது போன்று தண்ணீரில் ஆபத்து உணராமல் குளிக்கும் மா ணவர்கள் மற்றும் சிறுவர்க ளை காவல்துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News