உள்ளூர் செய்திகள்
எலவனாசூர்கோட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
- முனியன் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்.
- விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா தியாகை கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி முனியன் (வயது 43). வெளிநாட்டில் இருந்து திரும்பிய இவர் அனைத்து உறவினர் வீட்டுக்கும் சென்று விட்டு பின்னர், ஆசனூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புத்தமங்கலம் கோழி பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தனிப்பிரிவு தலைமை போலீஸ் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொதுமருத்துவ மனைக்குஅனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.