உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மோதி வாலிபர் சாவு

Published On 2023-06-18 15:08 IST   |   Update On 2023-06-18 15:08:00 IST
  • அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது43). இவரது மகன் ஆனட்ஸ்ராஜ் (20). இவரது நண்பர் கோவையைச் சேர்ந்த பிரசாத் (20). சம்பவத்தன்று ஆனஸ்ட்ராஜூம், பிரசாத்தும் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை அருகே சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ஆனஸ்ட்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த உடன் சென்ற பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தனசேகரன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News