உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

Published On 2023-07-26 15:49 IST   |   Update On 2023-07-26 15:49:00 IST
  • கல்லின் மீது வண்டி ஏறி இறங்கியதால், வண்டியில் இருந்து தமிழரசன் தவறி கீழே விழுந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி அருகே உள்ள கலசம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் தமிழரசன் (வயது 29), விவசாயி.

இவர் நேற்று கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது வழியில் இருந்து கல்லின் மீது வண்டி ஏறி இறங்கியதால், வண்டியில் இருந்து தமிழரசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News