உள்ளூர் செய்திகள்

சலுகை கட்டணத்தில் வழங்கப்பட்ட தேநீரை குடிக்க குவிந்த வாடிக்கையாளர்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தேநீர், வடை ரூ.3-க்கு விற்பனை

Update: 2022-08-15 06:59 GMT
  • 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேநீர் கடையில் டீ, காபி, வடை ஆகிய எது வாங்கினாலும் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது
  • இதனால் காலை முதலே அந்த கடையில் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல், ஆக.15-

நாட்டின் 76-வது சுதந்திர தினவிழா இன்று கேலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேநீர் கடையில் டீ, காபி, வடை ஆகிய எது வாங்கினாலும் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சாலையில் உள்ள ஸ்ரீசாய் தேநீர் கடையில் இந்த விற்பனை இன்று அதிகாலை முதல் நடைபெற்றது.

வழக்கமாக திண்டுக்கல்லில் ஒரு டீயின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இதேபோல் ஒரு வடையின் விலை ரூ.5 முதல் ரூ.8 வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சலுகை விற்பனையால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் குவிந்தனர். சலுகை அறிவிப்பால் அளவு குறைவாக இருக்குமோ என்று சந்தேகமடைந்த நிலையில் வழக்கமாக விற்கப்படும் அதேஅளவில் டீ மற்றும் வடை விற்கப்பட்டது. இதனால் காலை முதலே அந்த கடையில் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News