உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் வரி கட்டாத 5 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது,
திண்டிவனத்தில் வரி கட்டாத 5 கடைகளுக்கு சீல்,
- நகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ரூ.12.06 கோடி நிலுவை உள்ளது. இதனால், நகராட்சி ஊழியர்களுக்கு தீவிர வரி வசூல் செய்வதற்கு உத்தரவிட்டார்
- பல ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருக்கும் 5 கடைகளை ஆணையர் தட்சிணாமூர்த்தி அறிவுத்திறன் படி நகராட்சி மேலாளர் சந்திரா ஊழியர்களுடன் சென்று இன்று பூட்டி சீல் வைத்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் நகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ரூ.12.06 கோடி நிலுவை உள்ளது. இதன் காரணமாக நகரின் வளர்ச்சி பணி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஊழியர்களுக்கு தீவிர வரி வசூல் செய்வதற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருக்கும் 5 கடைகளை ஆணையர் தட்சிணாமூர்த்தி அறிவுத்திறன் படி நகராட்சி மேலாளர் சந்திரா ஊழியர்களுடன் சென்று இன்று பூட்டி சீல் வைத்தார். குடிநீர், வீட்டு வரி,கடை வரி உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை பொதுமக்கள் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைப்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.