உள்ளூர் செய்திகள்

காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்: கவர்னர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

Published On 2024-10-03 07:06 IST   |   Update On 2024-10-03 07:06:00 IST
  • ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்ல உறவை உருவாக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
  • அவருடைய செயல்பாடுகளை பார்ப்போம் என்றால் ஆன்லைன் ரம்மிக்கு ஒரு பிராண்ட் தூதர் போல் உள்ளது.

காந்தி மண்டபத்தில் மதுபாடடில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார்.

அதற்கு தி.மு.க. அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்ல உறவை உருவாக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் நடவடிக்கைகள் எல்லாம் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை எப்படியெல்லாம் துண்டிக்கலாம் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.

இன்றைய அவருடைய செயல்பாடுகளை பார்ப்போம் என்றால் ஆன்லைன் ரம்மிக்கு ஒரு பிராண்ட் தூதர் போல், நீட் தேர்வுக்கு ஒரு பி.ஆர்.ஓ. போல் இருந்தால் எப்படி நடவடிக்கை இருக்குமோ, அப்படிப்பட்ட நடவடிக்கைகளைதான் ஆளுநர் மேற்கொண்டு இருக்கிறார்.

காந்தி மண்டபத்திற்குள் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. அது மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனக் கூறியிருக்கிறார். காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம் போன்றவை எல்லாம் பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்து வழக்கம்.

தி.மு.க. அரசு மது விலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. மதுவை ஒழிக்க வேண்டுமென்றால் எல்லா மாநிலங்களும் அதை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசுதான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் முதல்வராக மு.க. ஸ்டாலின் இருப்பார்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

Similar News