உள்ளூர் செய்திகள்

தார் சாலை புதுப்பித்தல் பணி

Published On 2023-06-15 15:41 IST   |   Update On 2023-06-15 15:41:00 IST
  • மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணியை தொடங்கி வைத்தனர்.
  • மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 1,2,3,4-வது வார்டிற்குட்பட்ட உப்கார் லேவுட், நஞ்சப்பா சர்க்கிள், திருவள்ளுவர் நகர் பிரதான சாலை, பேகேபள்ளி பிரதான சாலை, காந்தி சிலை முதல் தெரு, பி.டி.ஆர். நகர் முதல் தெரு, பேடரப்பள்ளி பிரதான சாலை, மற்றும் சாந்தபுரம் முதல் சின்ன எலசகிரி பிரதான சாலை பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிக்கு, பிரகாஷ் எம்.எல்.ஏ.மற்றும் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன், அசோகா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News