உள்ளூர் செய்திகள்

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் ரூ.18½ லட்சத்தில் தார் சாலை

Published On 2022-10-19 10:36 GMT   |   Update On 2022-10-19 10:36 GMT
  • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
  • 15-வது மானிய பொதுநீதியின் கீழ் ரூ.18½ லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தரக் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது மானிய பொதுநீதியின் கீழ் ரூ.18½ லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டான்லி, ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News