உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் பட்டா மாறுதலுக்கு தமிழ்நிலம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-25 13:59 IST   |   Update On 2022-09-25 13:59:00 IST
  • பட்டா மாறுதலுக்கு தமிழ்நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முைற
  • பட்டா மாறுதலுக்கு தமிழ்நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முைற

பரமத்திவேலூர்:

பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளை சேர்த்த விவசாயிகள் பட்டா மாறுதலுக்கு தமிழ்நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முைறயை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.இதன்படி பட்டா மாறு தலுக்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்ல்லை. முன்னதாக நிலம் எங்கிருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவல கத்திற்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். விடுமுறை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம். பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்கக் கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.கட்டணம் செலுத்தப்பட்ட தும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைகக்கு விண்ணப்பங்கள் பட்டியலி டப்படும். பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உத்தரவின் நகல், பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்க ளையும் இணையத்திலேயே கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News