உள்ளூர் செய்திகள்

கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

புகைப்படகண்காட்சியில் தமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விளக்க சிறப்பு பட்டிமன்றம்

Published On 2023-03-20 08:53 GMT   |   Update On 2023-03-20 08:53 GMT
  • பட்டிமன்றத்தை சந்தனக்குமார் நடுவராக இருந்து நடத்தினார்.
  • விழாவை தென்காசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தென்காசி:

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி தென்காசி ஐ.சி.ஐ. பள்ளியில் வைத்து நடைபெற்று வருகிறது. அதில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கம் குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

நெருங்கி வரும் தமிழக அரசின் ஈராண்டு சாதனையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தது தொழிற் புரட்சியா? சமூக நலத்திட்டங்களா? என்னும் தலைப்பில் பட்டி மன்றத்தின் நடுவராக பலபத்திர ராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனக்குமார் தலைமையில் நடைபெற்றது. தொழிற்புரட்சியே எனும் தலைப்பில் தென்காசி முதுகலை தமிழாசிரியர் காளிராஜ், சங்கரன்கோவில் பட்டதாரி ஆசிரியர் உமா ஆகியோரும் சமூக நலத்திட்டங்களே எனும் தலைப்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பிச்சையம்மாள். சங்கரன்கோவில் வையாபுரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மாரிமுத்து ஆகியோரும் பட்டிமன்ற சிறப்புரை ஆற்றினார்கள்.

விழாவினை தென்காசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தென்காசி வட்டார நூலகர் பிரம நாயகம், கிளை நூலகர் சுந்தர், மகேஷ் கிருஷ்ணன் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் பட்டிமன்றத்தில் பேச்சாளராக கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News