உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய காட்சி.

தமிழின் பெருமையை பறை சாற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

Published On 2022-11-26 09:33 GMT   |   Update On 2022-11-26 09:33 GMT
  • மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது
  • தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமையாக உள்ளது.

நெல்லை:

பொருநை இலக்கிய திருவிழாவில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-

மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்தியாவிற்கே முன்னோ டியான திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம். காணி மலைக்கிராமங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

தமிழ சாகித்ய அகாடமி அமைப்பது குறித்த கோரிக்கைளை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமையாக உள்ளது.

குழந்தைகளுக்கு இலக்கியத்தை கொண்டு செல்வது என்பது நமது கடமையாக உள்ளது. அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். முதல்-அமைச்சர் எழுத்தா ளர்களுக்கும், எழுத்துக்கும் கொடுக்கும் முக்கியதுவத்தின் அடையா ளமே கனவு இல்ல திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News