உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் செய்த சிறுமியின் உறவினர்கள்.

சாம்பவர்வடகரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

Published On 2023-03-30 09:48 IST   |   Update On 2023-03-30 09:48:00 IST
  • சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
  • சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சாம்பவர்வடகரை:

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 25). கூலி தொழிலாளி.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கட்டாயப்படுத்தி ஏற்றி உள்ளார்.

பின்னர் சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் மாணிக்கம் தலைமறைவாகி விட்டார். அவரை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் வேல்கனி, சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இதற்கிடையே மாணிக்கம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் புளியங்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News