உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அருகே மாயமான தொழிலாளி குளத்தில் பிணமாக மீட்பு- கொலை செய்யப்பட்டாரா?
- பட்டிபுலம் குளத்தில் லோகநாதன் பிணமாக மிதந்தார்.
- தொழிலாளி குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது45). தொழிலாளி. கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பட்டிபுலம் குளத்தில் லோகநாதன் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.மர்ம நபர்கள் யாரேனும் லோகநாதனை அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.