உள்ளூர் செய்திகள்
வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திசையன்விளையில் நடைபெற்ற திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் கே.பி.கே. ஜெயகுமார், சங்கர பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், பிரின்ஸ், ராஜேஷ் குமார், ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், ராதாகிருஷ்ணன், துரை சந்திரசேகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.