உள்ளூர் செய்திகள்
தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
- காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
- காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே டி உதயம், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.