உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது
- செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தார்.
- வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்த நவீன் (வயது 33) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவடி:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 38). இவர் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி காலை குழந்தையை வேப்பம்பட்டில் உள்ள அரசு பள்ளியில் விட்டு வீட்டுக்குள் நுழையும்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென விஜயலட்சுமியை தாக்கி அவரை கட்டிப்போட்டு அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் கம்மல், காலில் அணிந்திருந்த கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தார். இந்நிலையில் விஜயலட்சுமியிடம் நகை பறித்த திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்த நவீன் (வயது 33) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.