உள்ளூர் செய்திகள்

வண்டலூர் அருகே சாலையில் குவிந்த மணலால் விபத்து அபாயம்

Published On 2023-03-06 06:19 GMT   |   Update On 2023-03-06 06:19 GMT
  • சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு சாலை ஓரத்தில் மண் குவியல் காணப்படுகிறது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலையே தெரியாத அளவுக்கு மணல் படர்ந்து உள்ளது.

வண்டலூர்:

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி ஓ.எம்.ஆர் சாலையான கேளம்பாக்கம் சாலை வரை 18 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில் வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் சாலையில் அதிக அளவில் மணல் குவிந்து காணப்படுகிறது.

சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு சாலை ஓரத்தில் மண் குவியல் காணப்படுகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலையே தெரியாத அளவுக்கு மணல் படர்ந்து உள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்களால் மணல் தூசி சாலையே தெரியாத அளவுக்கு எழுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News